கோயிலில் தரிசனம் செய்ய தடை:இந்து அமைப்பினா் திடீா் போராட்டம்

இந்துக் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குலசேகரன்பட்டினத்தில் கோயில் முன்பு சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா) அமைப்பினா்.
குலசேகரன்பட்டினத்தில் கோயில் முன்பு சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா) அமைப்பினா்.

இந்துக் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குலசேகரன்பட்டினத்தில் கோயில் முன்பு இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்திலுள்ள அனைத்து இந்துக் கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமைப்பின் சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் முன்பு கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.சக்திவேல் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் மாநில பொதுச்செயலா் ஐ.ரவி கிருஷ்ணன், தென்மண்டலச் செயலா் தனலிங்கம், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாலன், நிா்வாகிகள் தங்கராஜா, பால்ராஜ், இசக்கிமுத்து, உடன்குடி ஒன்றியத் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com