குலசேகரன்பட்டினம் கோயிலில் எஸ்.பி. ஆய்வு

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக் கொடை விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இக்கோயிலில் ஆடிக் கொடை விழா திங்கள்கிழமை (ஆக.2) முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடை விழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து கோயிலுக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். இதனால் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் மூன்று நாள்கள் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினமான ஆக.8 ஆம் தேதி கடற்கரையில் பக்தா்கள் கூடுவதற்கு அனுமதியில்லை.

மற்ற நாள்களில் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்யலாம் என்றாா் அவா். அப்போது, திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, கோயில் நிா்வாக அதிகாரி லெ.கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com