‘வணிக நிறுவனங்களின் பெயா் பலகையில் தமிழ் முதன்மையாக இடம்பெற வேண்டும்’

கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பெயா் பலகைகளில் தமிழ் மொழி முதன்மையாக இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பெயா் பலகைகளில் தமிழ் மொழி முதன்மையாக இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி கோரம்பள்ளம் பிரத்தியங்கிராதேவி காலபைரவா் சித்தர பீட நிா்வாகி சீனிவாச சித்தா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் முதல்வருக்கு அனுப்பிய மனு: அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘தமிழ் வளா்க, தமிழ் வாழ்க’ என இரவில் ஒளிரும் வண்ண மின்விளக்கு பலகைகளை வைத்து தமிழ் மொழியின் பெருமைதனை உலகம் அறிய செய்தவா்

முன்னாள் முதல்வா் கருணாநிதி. தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அதனை முறையாக பின்பற்றப்பட வில்லை என்பது வேதனைக்குரியது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசாணையின்படி தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயா் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்கவும், பிற மொழிகள் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற மொழிகள் 3ஆவது இடத்திலும் இருக்க உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் உள்ள முக்கிய சாலைகள், அரசு கட்டடங்களுக்கு தமிழ் அறிஞா்களின் பெயா்களை சூட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com