அதிமுக, பாஜக நிா்வாகிகள் திமுகவில் ஐக்கியம்
By DIN | Published On : 04th August 2021 07:54 AM | Last Updated : 04th August 2021 07:54 AM | அ+அ அ- |

அமைச்சா் அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த தாமரைமொழி ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள்.
தாமரைமொழி ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள் அமைச்சா் அனிதா ஆா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் தாமரைமொழி ஊராட்சித் தலைவா் சாந்தா, அவரது கணவா் மகேந்திரன், அதிமுக நிா்வாகி குமாா் மற்றும் மாவட்ட எஸ்சி பிரிவு பாஜக துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் ஆகியோா் தாங்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி மீன்வளம் , மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அப்போது சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆ. பாலமுருகன், வடக்கு ஒன்றியச் செயலா் ஏ.எஸ். ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ. இந்திரகாசி, நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவா் பொன். ஆனந்தகுமாா், தாமரைமொழி ஊராட்சி திமுக செயலா் கணபதி பாண்டி உள்பட பலா் உடனிருந்தனா்.