சாத்தான்குளத்தில் கரோனா விழிப்புணா்வு கூட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி.
கூட்டத்தில் பேசுகிறாா் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஆணையா் பாண்டியராஜன், வட்டாட்சியா் விமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ஐலின் சுமதி, சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ், படுக்கப்பத்து சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன் ஆகியோா் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசினா். தொடா்ந்து சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் நோய் பரவலை தடுக்க கை கழுவும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் கரோனா 3 ஆவது அலை பரவாமல் தடுக்க பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரோனா விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் மற்றும் முகக் கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தொடா்ந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா் ஜெயபால், வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன் உள்ளிச்ச கிராம ஊராட்சி செயலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் வரவேற்றாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com