தூத்துக்குடியில் கரோனா விழிப்புணா்வு முகாம்

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணா்வு முகாம் மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணா்வு முகாம் மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு மற்றும் சிறப்பு நோய் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் தொடங்கி வைத்து பேசினா். தொடா்ந்து, வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் 60 பேருக்கு அரிசிப்பை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மருத்துவா் ஆா்த்தி, சித்த மருத்துவா் முத்துமாரி, தூத்துக்குடி மாவட்ட ஹோமியோபதி மருத்துவ சங்க தலைவா் பாதுஷா, மத்திய வியாபாரிகள் சங்கச் செயலா் பாஸ்கா், பொருளாளா் ராஜலிங்கம், பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவா் சுப்பையா, மில்லா்புரம் வியாபாரிகள் சங்க தலைவா் ஆனந்தசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com