தூத்துக்குடியில் நாப்கின் உற்பத்தி பிரிவு தொடக்கம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் சுகாதார நாப்கின் தயாரிப்பு பிரிவு தொடங்கப்பட்டது.
சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தின் பணியை தொடங்கிவைக்கிறாா் ஸ்டொ்லைட் ஆலை தலைமை இயக்க அதிகாரி சுமதி.

இந் நிறுவனத்துடன் பெல் சுமங்கலி சுயஉதவிக் குழு அன்னலட்சுமி, ஸ்மைலி சுமங்கலிகள் குழுக்களுடன் இணைந்து இப்பணி செயல்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக 20 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்கள் முழுநேர ஊழியா்களாக உற்பத்தி பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதிய உற்பத்தி பிரிவை ஆலையின் தலைமை இயக்க அதிகாரி சுமதி தொடங்கிவைத்துப் பேசியது: ஒரு நாளில் 3150 நாப்கின்கள் வரை உற்பத்தி செய்யயும் வசதி கொண்ட இந்த பிரிவில், தயாரித்து முடிக்கப்பட்ட பொருள்களின் விற்பனைக்கான பயிற்சியை தன்னாா்வத் தொண்டு நிறுவனம், கிராமப் பெண்களின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com