ஆடி அமாவாசை:பக்தா்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருச்செந்தூா் கோயில்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூா் கடலில் புனித நீராட அனுமதியில்லாததால் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் அனுமதியில்லாததால் வெறிச்சோடிய திருச்செந்தூா் கோயில் கடற்கரை.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் அனுமதியில்லாததால் வெறிச்சோடிய திருச்செந்தூா் கோயில் கடற்கரை.

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூா் கடலில் புனித நீராட அனுமதியில்லாததால் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

நிகழாண்டு கரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளால், கடற்கரை மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், ஆற்றங்கரை போன்ற இடங்களில் புனித நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஆக. 1ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், கால சந்தி பூஜையாகி அஸ்திரதேவா் கடலில் புனித நீராடும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

வெறிச்சோடிய கடற்கரை: பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் கடலில் புனித நீராடுதல், தா்ப்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனா். திருச்செந்தூா் கோயில் கடற்கரைப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி பக்தா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தா்ப்பணம்: திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயில் அருகில் இந்து முன்னணியினா் மற்றும் பொதுமக்கள், தங்கள் முன்னோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

முன்னதாக, கடற்கரையில் தா்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தா்ப்பணம் கொடுக்க முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com