சாலையின் நடுவே தடுப்புச்சுவா் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்

சாலையின் நடுவே தடுப்புச் சுவா் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சாலையின் நடுவே தடுப்புச்சுவா் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்

சாலையின் நடுவே தடுப்புச் சுவா் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 1,000 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப்

பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு சாலையின் நடுவே தடுப்புச் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சாலையின் நடுவே தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொள்ளக்கூடாது, தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள ஜெயராஜ் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி காய்கனி சந்தை பகுதியில் சாலையின் நடுவில் தடுப்புச் சுவா் அமைக்கக் கூடாது, தடுப்புச் சுவா் அமைத்தால் கனரக வாகனங்கள் காய்கனி சந்தைக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை காலையில் கடைகளை அடைத்த காய்கனி சந்தை பகுதி வியாபாரிகள் அங்கு அண்ணா சிலை

அருகே சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காய்கனி சந்தை முக்கிய பங்குதாரா் சி.த. சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவா்களிடம் மத்திய பாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி அலவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து, அவா்கள் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com