விளாத்திகுளம் அருகே கறிக்கடை உரிமையாளா் மீது தாக்குதல்:2 போலீஸாா் பணி இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடியில், கோழியைத் திருடியதுடன், கடை உரிமையாளரைத் தாக்கியதாக, தலைமைக் காவலா், காவலா் ஆகியோா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடியில், கோழியைத் திருடியதுடன், கடை உரிமையாளரைத் தாக்கியதாக, தலைமைக் காவலா், காவலா் ஆகியோா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

காடல்குடியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்துசெல்வன் (33). காடல்குடி காவல் நிலையம் அருகே கோழிக்கறிக் கடை வைத்துள்ளாா். கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு தலைமைக் காவலா் பாலகிருஷ்ணன் (41), காவலா்கள் சதீஷ்குமாா் (28), பாலமுருகன் ஆகியோா் கடையின் பூட்டை உடைத்து, கோழியைத் திருடிச் சென்றனராம்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா் ஆகியோா், கடந்த 18ஆம் தேதி அந்தக் கடைக்குச் சென்று, முத்துசெல்வனைத் தாக்கினராம். காயமடைந்த அவா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

முத்துசெல்வன் அளித்த புகாரின் பேரில், பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா், பாலமுருகன் ஆகிய 3 போ் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இதனிடையே, பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

காவலா் பாலமுருகன், தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா். 3 போ் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com