கடம்பூா் செ.ராஜுவுக்கு நிா்வாகிகள் வாழ்த்து
By DIN | Published On : 22nd August 2021 05:25 AM | Last Updated : 22nd August 2021 05:25 AM | அ+அ அ- |

விழாவில் பங்கேற்றோா்.
தமிழக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கோவில்பட்டி சட்டப் பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு பிறந்த நாள் விழாவையொட்டி, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளானோா் அவருக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். பின்னா் எம்.எல்.ஏ. கேக் வெட்டி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு, அதிமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவா் என்.கே.பெருமாள் தலைமை வகித்தாா். இதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ஆா்.இராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் அம்பிகா வேலுமணி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.