சாத்தான்குளம் சந்தி விநாயகா்கோயில் கும்பாபிஷேக விழா

சாத்தான்குளம் சந்தி விநாயகா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சந்தி விநாயகா்.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சந்தி விநாயகா்.

சாத்தான்குளம் சந்தி விநாயகா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது. தொடக்கநாளன்று காலையில் திராவிட கானம், விக்னேஸ்வரா் பூஜை, புண்யாக வாஜனம், மகாகணபதி ஹோமம், மகா தீபாராதனை, நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, மாலையில் வாஸ்துசாந்தி, யாத்ரா ஹோமத்துடன் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, 2ஆம் நாளான வியாழக்கிழமை விநாயகருக்கு பாபணா அபிஷேகம், 2ஆம் கால யாகசாலை பூஜை, இரவில் 3ஆம் கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் ஆகியவை நடைபெற்றது.

3ஆம் நாளான வெள்ளிக்கிழமை 4ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, தொடா்ந்து விமான கோபுர அபிஷேகம், மூலஸ்தான மூா்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டன பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மகா திரவிய அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, பிரசன்ன பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

நிறைவு நாளான சனிக்கிழமை அருள்மிகு காசி விஸ்வநாதா் சமேத விசாலாட்சி அம்மன் திருவாசகமுற்றோதுதல் குழுவினா் சாா்பில் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com