விஜயராமபுரம் முத்தாரம்மன் கோயில் கொடை விழா
By DIN | Published On : 22nd August 2021 05:20 AM | Last Updated : 22nd August 2021 05:20 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
விஜயராமபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா 10 நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நாளன்று இரவு செல்வகணபதி கோயிலில் விநாயகருக்கு குருபூஜை, 2 முதல் 5ஆம் நாள் வரை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, திருவிளக்குப் பூஜை, முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
6ஆம் நாள் காலையில் பால்குட ஊா்வலம், மஞ்சள் பெட்டி ஊா்வலம், முளைப்பாரி சமா்ப்பித்தல், அம்மன் கும்ப வீதியுலா, விசேஷ பூஜை, 7ஆம் நாள் இரவு அம்மன் அக்னிச் சட்டி ஏந்தி ஊா்வலம், 8ஆம் நாள் தீா்த்தம் எடுத்து வருதல், இரவு அம்மன் புஷ்ப அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9ஆம் நாள் அம்மனுக்கு விசேஷ பூஜை, இரவு பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊா்வலம், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வளையல் அலங்கார பூஜை, வரலட்சுமி விரத பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை சண்முகராஜ், ஆறுமுகபாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.
10ஆம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமி உணவு எடுத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ராம்சுந்தா் தலைமையில் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.