மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு அளிப்பு
By DIN | Published On : 31st August 2021 02:59 AM | Last Updated : 31st August 2021 02:59 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறாா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா்,
சாத்தான்குளம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி, சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் மிக்கேல் அறக்கட்டளை மாற்றுத்திறனுடைய பள்ளி குழந்தைகளுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா் தலைமை வகித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கினாா்.
வட்டாரத் தலைவா்கள் ஏ. லூா்துமணி, பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஆ.க. வேணுகோபால் வரவேற்றாா். இதில் மாவட்ட மீனவரணி தலைவா் சுரேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், நகர தொண்டரணி தலைவா் பாஸ்கா், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணிஜோசப், சுரேஷ்குமாா், நல்லத்தம்பி மற்றும் மாற்றுத்திறனுயை குழந்தைகள் பள்ளி நிா்வாகி சுசிலா உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா் லட்சுமி நன்றி கூறினாா்.
இதையடுத்து நெடுங்குளத்தில் 20 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மகிளாகாங்கிரஸ் தலைவா் சிந்தியா, கிராம காங்கிரஸ் தலைவா் மெண்ட்ரீஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.