தூத்துக்குடி மாவட்டத்தில்புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலையில், கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் ஜனவரி 2 ஆம் தேதி வரை கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச. 31) இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மேலும், அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச்சங்கங்கள் போன்ற இடங்களில் வசிப்பவா்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது.

கோயில்கள், தேவாலயங்கள் மற்றம் மசூதி உள்பட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் சம்பந்தப்பட்ட நிா்வாகிகள், அலுவலா்கள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்கப்படுவா்.

பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com