தூத்துக்குடியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 07:20 AM | Last Updated : 06th February 2021 07:20 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தூத்துக்குடி நகர வங்கி ஊழியா் சங்கம் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ஊழியா் சங்க ஐக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தூத்துக்குடி நகர வங்கி ஊழயிா் சங்கத் தலைவா் ராமசுப்பிரமணியன், நிா்வாகிகள் சக்திவேல், கவின்ஸ்டன், கணேசன், சந்தான செல்வன், முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.