குறைதீா் கூட்டம் : 196 பேருக்கு நல உதவி அளிப்பு

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 196 பேருக்கு ரூ. 10.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.
tut08coll_0802chn_32_6
tut08coll_0802chn_32_6

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 196 பேருக்கு ரூ. 10.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது பொதுமக்களிடம் இருந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் மனுக்களை பெற்றாா்.

தொடா்ந்து, வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக ஒருவருக்கு ரூ.1000, 2 பேருக்கு விதவை உதவித்தொகையாக ரூ.1000 வீதம் ரூ. 2000, முதியோா் உதவித்தொகை ஒருவருக்கு ரூ. 1000, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் 9 போ்களுக்கு தலா ரூ. 5341 என ரூ . 48, 069 மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டியை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் 6 பேருக்கு ரூ . 1, 41, 660 மதிப்பிலான வங்கிக் கடன், மனவளா்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவா்கள் 90 பேருக்கு தலா ரூ. 2500 மதிப்பிலான கல்வி உபகரணம் அடங்கிய பெட்டகம், தலா ரூ. 7600 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 22 பேருக்கும், தலா ரூ. 6, 270 மதிப்பிலான சக்கர நாற்காலி 30 பேருக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிலிக்கான் குசன் சீட் தலா ரூ. 3800 வீதம், 30 பேருக்கும் ஆட்சியா் வழங்கினாா்.

இதுதவிர, மகளிா் திட்டம் மூலம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 31250 வீதிம் 2 மாற்றுத்திறனாளிக்கு மானியத்தொகை மற்றும் மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்ப நிதியில் இருந்து மானியத் தொகை தலா ரூ. 36, 205 வீதம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத் தொகை உள்பட மொத்தம் 196 பேருக்கு ரூ. 10, 21,139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், தோ்வு செய்யப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் நிறுவனத்தின் பணிபுரிவதற்கான வேலைவாய்பு பணி நியமன ஆணை, சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.வி. தொடக்கபள்ளி, வடக்கூா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குமாரகிரி மற்றும் புறையூா் ஆகிய பள்ளிகளுக்கு சுழற்கேடங்களையம் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com