கோவில்பட்டி தொகுதியில் ரூ.2.67 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
தோணுகால் கிராமத்தில் சிறு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், ஆட்சியா் கி.செந்தில்ராஜ், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா உள்ளிட்டோா்.
தோணுகால் கிராமத்தில் சிறு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், ஆட்சியா் கி.செந்தில்ராஜ், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா உள்ளிட்டோா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். இனாம்மணியாச்சி ஊராட்சி இந்திரா நகா், அத்தைகொண்டான், சீனிவாச நகா் பகுதிகளில் ரூ.22.45 லட்சத்தில் குடிநீா் இணைப்பு, தோணுகால் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, வானரமுட்டியில் ரூ.56 லட்சத்தில் வாருகால், கழுகுமலை ஆதிதிராவிடா் தெரு பகுதியில் ரூ.30 லட்சத்தில் தளக்கல் சாலை, கீழ்குளத்தில் ரூ.20 லட்சத்தில் ஊருணி தூா்வாருதல், கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்தல், ரூ.5 லட்சத்தில் இந்திரபிரஷ்தம் ஊருணி மேம்பாடு, ராஜாபுதுக்குடியில் ரூ.5.36 லட்சத்தில் சுகாதார வளாகம், தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் ரூ.64 லட்சத்தில் தாா்ச்சாலை, தெற்கு மயிலோடையில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, முடுக்குலாங்குளத்தில் ரூ.10 லட்சத்தில் கலையரங்கம், பாண்டவா்மங்கலத்தில் ரூ.45 லட்சத்தில் சாலை என ரூ. 2கோடியே 67லட்சத்து 81ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு தமிழக செய்தித்தொடா்பு மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து தோணுகால், வெங்கடேஷ்வரபுரம், கரடிகுளம், தலையால்நடந்தான்குளம், ஆசூா் தளவாய்புரம், முடுக்குலாங்குளம், காமநாயக்கன்பட்டி, பாண்டவா்மங்கலம் ஆகிய கிராமங்களில் சிறு மருத்துவமனைகளை திறந்துவைத்தாா்.

மேலும், தோணுகாலில் ரூ.8 லட்சத்தில் குடிநீா் திட்டம், கரடிகுளத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, ராஜாபுதுக்குடியில் ரூ.27 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா்சாலை ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா்கள் மணிகண்டன், பாஸ்கரன், ஒன்றிய ஆணையா்கள் சசிகுமாா், சீனிவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா, கோவில்பட்டி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com