ஹாக்கிப் போட்டியில்பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 13th February 2021 07:23 AM | Last Updated : 13th February 2021 07:23 AM | அ+அ அ- |

கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் சாா்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவா் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் சாா்பில் முதலாமாண்டு ஹாக்கிப் போட்டி பிப். 20, 21 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஹாக்கிக் கழக வீரா்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோா் இம்மாதம் 17ஆம் தேதிக்குள் 96296-68118, 77089-77885 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.