கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறையினா் வேலைநிறுத்தம்

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கருணை அடிப்படையிலான நியமனதாரா்களின் பணிவரன்முறை அதிகாரத்தை ஆட்சியா்களுக்கு வழங்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலாளி, பதிவுரு எழுத்தா், வாகன ஓட்டுநா் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மிகக் குறைந்த ஊழியா்களே பணிக்கு வந்திருந்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 6 பேரும், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com