திருச்செந்தூா் மாசித் திருவிழாவில் சுவாமி, அம்மன் வீதியுலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 2ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி குமரவிடங்கப் பெருமான்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 2ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி குமரவிடங்கப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதியுலா வந்தனா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி - அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

திருவிழாவின் 2ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, அருள்மிகு தூண்டுகை விநாயகா் கோயில் அருகேயுள்ள ஆழ்வாா்திருநகரி ஆண்டியப்பப் பிள்ளை மண்டபத்துக்கு வந்து சோ்ந்தனா். தொடா்ந்து, அம்மன் மட்டும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மண்டபத்தை வந்தடைந்தாா். இரவில் மண்டபத்திலிருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோயிலைச் சோ்ந்தனா்.

3ஆம் நாள்: திருவிழா 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை (பிப்.19) காலை மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி உலா வந்து மேலக்கோயில் சோ்கின்றனா். மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வருகின்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. விஷ்ணுசந்திரன், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com