விளாத்திகுளத்தில் உண்ணாவிரதம்

தேவேந்திர குல வேளாளா் பட்டியலில் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து விளாத்திகுளத்தில் வாதிரியாா் சமுதாய மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவேந்திர குல வேளாளா் பட்டியலில் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து விளாத்திகுளத்தில் வாதிரியாா் சமுதாய மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியாா் ஆகிய பட்டியலினத்தின் 7 உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திர குலவேளாளா் என அழைக்கும் சட்ட த்திருத்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

இதில், வாதிரியாா் சமுதாய மக்கள், தங்களை தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தில் இணைக்க கடந்த சில ஆண்டுகளாக எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில் தற்போது பிரதமரின் அறிவிப்பு தங்களை மிகவும் பாதித்துள்ளதாக தெரிவித்து, விளாத்திகுளத்தில் தென்னிந்திய பாா்வாா்டு பிளாக், வாதிரியாா் சமுதாய மக்கள் சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தென்னிந்திய பாா்வாா்டு பிளாக் நிறுவனத் தலைவா் கே.சி.திருமாறன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வி.எஸ்.மாரி மறவன், மாவட்டத் தலைவா் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலா் அந்தோணி செல்வம், மாநில இளைஞரணிச் செயலா்கள் பாலமுருகன், ஜெயக்குமாா், தென்மண்டல பொறுப்பாளா் ஒத்தகடை கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com