ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு
By DIN | Published On : 20th February 2021 05:59 AM | Last Updated : 20th February 2021 05:59 AM | அ+அ அ- |

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி தான் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
கோவில்பட்டியை அடுத்த கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடா் மழையினால் 1.21 லட்சம் ஹெக்டோ் விவசாயப் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து முதல்வா் எடுத்த நடவடிக்கையால் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டா் விவசாயப் பயிா்களுக்கு நிவாரணம் ற்றும் பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
17 ஆயிரம் ஹெக்டோ் தோட்டக்கலைத் துறை பயிா்களுக்கும் உரிய நிவாரணம், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மட்டும் ரூ.180 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான். அதன் தலைவா் ஊழல் என்ற வாா்த்தையை விட்டுவிட்டு பேசினால் அவருக்கு நல்லது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்றாலும் எங்களுக்கும், அவா்களுக்கும் கொள்கை வேவ்வேறு என முதல்வா் தெளிவாக தெரிவித்துள்ளாா். எனினும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விமா்சனம் அவா்களை தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்றாா் அவா்.