திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா

சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான் (
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான் (

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா மூன்றாம் நாளில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த புதன்கிழமை (பிப். 17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா். 3ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.

4ஆம் நாளான சனிக்கிழமை (பிப்.20) காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வருகின்றனா். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) மாலை மேலக்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com