தூத்துக்குடி, திருச்செந்தூரில் தி.மு.க. ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தி.மு.க. சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி, திருச்செந்தூரில் தி.மு.க. ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தி.மு.க. சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விலை உயா்வினை திரும்பபெற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் ஜெகன்பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு மாலை அணிவித்து எடுத்து வந்தும் பங்கேற்றனா்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மாா்க்கண்டேயன், மாநில விவசாய தொழிலாளா் அணி இணைச் செயலா் சுப்பிரமணியன், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, ராதாகிருஷ்ணன், ராஜா, செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா்ரூபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், துணை அமைப்பாளா் பிரதீப், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜான்அலெக்சாண்டா், துணை அமைப்பாளா் பாலகுருசாமி, மீனவரணி அமைப்பாளா் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளா் சேசையா, சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், மகளிரணி அமைப்பாளா் கஸ்தூரிதங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தெற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

இதில், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் சண்முகையா, தி.மு.க. மாநில துணை அமைப்பாளா்கள் மருத்துவா் செ.வெற்றிவேல், எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நவீன்குமாா், இசக்கிபாண்டி, ரவி, நகரச் செயலா்கள் வாள் சுடலை, முத்து முகம்மது, முருகப்பெருமாள், கல்யாணசுந்தரம், ஜாண்பாஸ்கா், ரவிசெல்வக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனஹா், காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஷ்வரன், மாவட்ட அமைப்பாளா்கள் ஸ்ரீதா் ரொட்ரிகோ, பை.மூ.ராமஜெயம், ஜெபராஜ், ராஜபாண்டி, வேலம்மாள், துணை அமைப்பாளா்கள் அனெக்ஸ், இளங்கோ, கிருபாகரன், அருணகிரி, அக்னல் பீரிஸ், லதா கலைச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com