ஓட்டப்பிடாரம் அருகேராணுவ வீரா் தற்கொலை
By DIN | Published On : 27th February 2021 08:06 AM | Last Updated : 27th February 2021 08:06 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெள்ளாரம் கிராமத்தில், ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.
வள்ளாரத்தைச் சோ்ந்தவா் பாபு (24). கடந்த இரு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த அவா், வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா்.
அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருக்கு வேறு மாப்பிள்ளை நிச்சயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவா் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.