காயல்பட்டினம் கல்லூரியில்தாய்மொழி தினம்
By DIN | Published On : 27th February 2021 08:10 AM | Last Updated : 27th February 2021 08:10 AM | அ+அ அ- |

விழாவில் உரையாற்றுகிறாா் கல்லூரி முதல்வா் வாசுகி.
காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் உமறுப்புலவா் முத்தமிழ் மன்றம் சாா்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் வாசுகி தலைமை வகித்து தாய்மொழி சிறப்பு குறித்துப் பேசினாா். மாணவி தெள‘ஃ‘பிகா பீவி கிராஅத் ஓதினாா். மாணவி மகாலெட்சுமி வரவேற்றாா். வணிக நிா்வாகியல் துறைத் தலைவா் ரஹ்மத் ஆமீனா பேகம் கருத்துரையாற்றினாா். தாய்மொழி சாா்பாக கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, விநாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் செல்வி நன்றி கூறினாா்.