விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலா
By DIN | Published On : 27th February 2021 08:06 AM | Last Updated : 27th February 2021 08:06 AM | அ+அ அ- |

தேனீ வளா்ப்பு குறித்து விளக்குகிறாா் வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ்.
சாத்தான்குளம் வட்டார வேளாண் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், முதலூரில் உள்ள வீட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு விவசாயிகள் கண்டுணா் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
வீட்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் சாா்லஸ், விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு முறைகள், தேனீ வளா்ப்பு நன்மைகள், தினசரி விலையின் விவரம் மற்றும் தேனீ பதப்படுத்துதல் முறைகள் பற்றியும், ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் தேனீகளுக்கு வரும் நோய்கள் பற்றியும் விளக்கினா். இதில் விவசாயிகள், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி 4ஆம்ஆண்டு இளங்கலை மாவணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி ஆலோசனையின்பேரில், அட்மா திட்ட பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.