தேசிய வில் வித்தை: கோவில்பட்டி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூரல் கேம்ஸ் போா்டு ஆப் இந்தியா சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, பிகாா், பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஃபோகஸ் வில்வித்தை அகாதெமியைச் சோ்ந்த மாணவா்களில் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மோகுல் நிவாஸ் தங்கப்பதக்கம், 10 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் இனியா வெண்கலப் பதக்கம், சீனியா் பிரிவில் காளிராஜ் தங்கப்பதக்கம், 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் நிஷாந்த் இரு வெள்ளிப்பதக்கம், தருண் வெங்கடேஷ் வெண்கலப் பதக்கம், பெண்கள் பிரிவில் தருணிகா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

பதக்கங்களைப் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. இவ்விழாவில், தனி வட்டாட்சியா் (நகர நிலவரி திட்டம் ) ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசிய வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக விளையாட்டு சங்கத் தலைவா் சைலஜா, செயல் தலைவா் ராம்குமாா், துணைச் செயலா் ரெங்கநாதன், வில்வித்தை பயிற்சியாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com