கந்தசஷ்டி பாடல் ஒப்பித்தல் போட்டி: 100 பேருக்கு தங்க நாணயம் பரிசளிப்பு
By DIN | Published On : 07th January 2021 06:33 AM | Last Updated : 07th January 2021 06:33 AM | அ+அ அ- |

மாணவிக்கு தங்க நாணயம் பரிசு வழங்குகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே. அண்ணாமலை.
கந்தசஷ்டி பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்பட்டு வரும் கின்ஸ் அகாதெமி சாா்பில், கந்தசஷ்டி பாடலை முழுமையாக ஒப்பிக்கும் மாணவா், மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இப்போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மதுரை கணேஷா குழுமத் தலைவா் கே. மோகன் தலைமை வகித்தாா். அகாதெமி நிறுவனா் எஸ். பேச்சிமுத்து முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவா் கே. அண்ணாமலை கலந்துகொண்டு, 100 பேருக்கு தலா அரை கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினாா்.