திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடியில் நடைபெறும் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெறும் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகளுக்கான பாவை விழா போட்டிகள், சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஜன. 9) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஒப்பித்தல் போட்டியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 5 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 5 பாசுரங்களை ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போா் திருஞானசம்பந்தா் பெருமை அல்லது பாவை நோன்பு என்ற தலைப்பில் எழுத வேண்டும்.

ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 10 பாசுரங்கள் ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போா் திருவெம்பாவையில் வான் சிறப்பு அல்லது ஆண்டாளின் பெருமை என்ற தலைப்பில் எழுத வேண்டும்.

ஒப்பித்தல் போட்டியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா், மாணவிகள் திருப்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் அல்லது திருவெம்பாவையில் 1 முதல் 20 பாசுரங்களை ஒப்பிக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போா் கோதைத்தமிழ் அல்லது திருவாசகத்தின் பெருமை என்ற தலைப்பில் எழுத வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0461-2320680 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com