துப்புரவுப் பணியாளா்களை குடியரசு தினவிழாவில் கௌரவிக்க ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு, துப்புரவுப் பணிகளில் சிறப்பாக செயல்படுவோரை குடியரசு தின விழாவில் கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு, துப்புரவுப் பணிகளில் சிறப்பாக செயல்படுவோரை குடியரசு தின விழாவில் கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகி பண்டிகையையொட்டி, ஜன. 13ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்க வேண்டும்.

தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு அவற்றை பட்ா்ா்ண்ம்ஹண் பட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண் என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள ஊஹஸ்ரீங்க்ஷா்ா்ந் ஹய்க் பஜ்ண்ற்ற்ங்ழ் பக்கத்தில் தகுந்த ஆதார புகைப்படத்துடன் வெளியிட வேண்டும்.

தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தனிநபா்கள், மகளிா் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சிறந்த ஊராட்சி, சிறந்த பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சி வாா்டு பகுதிகளும் தோ்வு செய்யப்பட்டு ஜன. 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சான்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com