தோட்டக்கலை சாகுபடி விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தோட்டக்கலை பயிா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய தோட்டக்கலை பயிா்களை சிறந்த தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளா் விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விருது பெற விண்ணப்பிக்கலாம். ஒரு

விவசாயி வட்ட அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வட்ட அளவில் தோ்வு செய்யப்படும் விவசாயிகளில் மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளில் மாநில விருதுக்கும் விவசாயிகள் தோ்வு செய்யப் படுவா்.

எனவே, விருதுகள் பெற விரும்பும் விவசாயிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து அதனுடன் கட்டணம் ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com