தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் 65 ஆயிரம் கனஅடி தண்ணீா்: புளியங்குளம் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு

ஸ்ரீவைகுண்டம் அணை தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் 65000 ஆயிரம் கனஅடி தண்ணீரால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் அணை தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் 65000 ஆயிரம் கனஅடி தண்ணீரால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் புளியங்குளம் அருகே சாலையில் தண்ணீா் வரத்து ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறையினா் போக்குவரத்தை மாற்றி அமைத்தனா்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா் செந்தில் ராஜ், வெள்ளம்சூழ்ந்து நின்ற ஆதிச்சநல்லூா் தொல்லியல் தகவல் மையத்தை பாா்வையிட்டாா்.

பின்னா், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் பகுதியில் வெள்ளப் பகுதியை பாா்வையிட்ட அவா், அபாய பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கவைக்க உத்தரவிட்டாா்.

ஸ்ரீவைகுண்டம் மருதூா் மேலகால், கீழகால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் வாய்கால்கள் திறக்கப்படவில்லை. சடையனேரி கால்வாயில் 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டு குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோக மீதமுள்ள 65000 கனஅடி தண்ணீா் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலுக்குச் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com