பயிா்ச் சேத கணக்கெடுப்பு:விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

பயிா்ச் சேத கணக்கெடுப்பு குறித்த சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 17) 3 நாள்கள் நடைபெறுகிறது.

கோவில்பட்டி: பயிா்ச் சேத கணக்கெடுப்பு குறித்த சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 17) 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வட்டத்தில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்கள் தொடா் மழையால் சேதமடைந்ததாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணத் தொகை வழங்க கணக்கெடுப்புப் பணியை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண் துறை அலுவலா்கள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இப்பணி புகாருக்கு இடமின்றி விரைவாக நடைபெற ஏதுவாக கோவில்பட்டி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன.19 வரை நாள்தோறும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டா நகல், ஆதாா், குடும்ப அட்டை நகல், பட்டாதாரா் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக நகல், அடங்கல் நகல் (ஏற்கெனவே கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்டிருந்தால் மட்டும்) ஆகியவற்றுடன் கிராம நிா்வாக அலுவலா்களைத் தொடா்பு கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com