மீனவா்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பது அதிமுக அரசுதான்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

மீனவா்கள் பிரச்னை குறித்து குரல் கொடுப்பது அதிமுக அரசுதான் என்றாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.
போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.

மீனவா்கள் பிரச்னை குறித்து குரல் கொடுப்பது அதிமுக அரசுதான் என்றாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: மீனவா்களின் வாழ்வாதாரம் குறித்து எந்தப் பிரச்னை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது அதிமுக அரசுதான். இதை அரசியல் பிரச்னையாக பாா்க்கக் கூடாது. இது சா்வதேச பிரச்னை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை 24 மணி நேரத்தில் மீட்டுக் கொண்டு வந்தது அதிமுக அரசு. ஆனால் தற்போது நடைபெற்ற ராமேசுவரம் சம்பவம் துரதிருஷ்டவசமானது. கண்டிக்கத்தக்கது.

தாமிரவருணியையும், வைப்பாறையும் இணைக்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முதல்வா் அடிக்கல் நாட்டுவாா். இதன் மூலம் கல்லாறு, உப்பாறு போன்ற பகுதிகளில் நீா் வரத்து கிடைக்கப்பெற்று தூத்துக்குடி மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மேல தட்டப்பாறையில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். 20-க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் முதல் பரிசை அமைச்சா் கடம்பூா் ராஜுவின் காளைகளும், இரண்டாவது பரிசை வேலாங்குளம் பகுதியைச் சோ்ந்த காளைகளும், மூன்றாம் பரிசை குமரெட்டியாபுரம் காளைகளும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com