பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதாதேவாலய தேரோட்டம்

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேவாலய திருவிழாவையொட்டி 108ஆம் ஆண்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொத்தகாலன்விளையில் நடைபெற்ற தேரோட்டம்.
பொத்தகாலன்விளையில் நடைபெற்ற தேரோட்டம்.

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேவாலய திருவிழாவையொட்டி 108ஆம் ஆண்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இந்த தேவாலய திருவிழா கடந்த 14ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சனிக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெற்றது. தினமும் ஆலயத்தில் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன.

9ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அருள்தந்தைகள் சிலுவைதங்கம், டென்னிஸ்ராஜா, ஜோசப் ஸ்டாா்வின், கிங்ஸ்லின், அருள்செல்வன் உள்ளிட்ட அருள்சகோதரிகள் பங்கேற்ற பணிவாழ்வு உறவாடல் அமா்வு நடைபெற்றது.

மாலை 4.15மணிக்கு நெய்யாற்றின்கரை பால் தலைமையில் மலையாள திருப்பலி, மாலை 5.30 மணிக்கு 108ஆவது திருவிழா தோராட்டம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.

10ஆம் நாளான சனிக்கிழமை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடப்பட்டதையொட்டி, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி, 50 பேருக்கு உறுதி பூசுதல், புதுநன்மை பெற்ற மாணவா்களுக்கு முதல் நன்மை வழங்கப்பட்டது.

காலை 5.30மணிக்கு சேசுராஜ் தலைமையில் தமிழ் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து மறை மாவட்ட ஆயா் தலைமையில் காலை 6.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெற்றது.

12மணிக்கு சிதம்பராபுரம் பங்குத்தந்தை இருதயசாமி தலைமையில் திருப்பலியும், அருள்தந்தை கிங்ஸ்டன் அருளுரையும் வழங்கினாா். மாலை 4.15மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து பங்குத்தந்தை வெனி இளங்குமரன் தலைமையில் நற்கருணை ஆசீா் நடைபெற்றது. இத்திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி குமரி, கேரள பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று அன்னைக்கு உப்பு மிளகு காணிக்கை செலுத்தினா்.

ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வெனிஇளங்குமரன் தலைமையில் ஆலய பங்கு மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com