திருச்செந்தூரில் 1,300 பேருக்கு பணிக்கான ஆணை
By DIN | Published On : 26th January 2021 12:53 AM | Last Updated : 26th January 2021 12:53 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தூா் நண்பா்கள் நல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1300 பேருக்கு பணிநியமன ஆண வழங்கப்பட்டன.
வேலை வாய்ப்பு முகாம் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை தலைவா் எஸ்.டி.செந்தில்வேல் தலைமை வகித்தாா்.
அறக்கட்டளை நிா்வாகிகள் வைத்தியநாதன், அனந்தராமன், மந்திரமூா்த்தி, முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் த.பொன்ரவி, தொழிலதிபா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில் 27 தனியாா் நிறுவனங்களை சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
4,000 போ் நோ்முக தோ்வில் கலந்து கொண்டதில், 1300 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், தாரங்கதாரா கெமிக்கல் நிறுவன உதவி தலைவா் சீனிவாசன் ஆகியோா் பணி நியமன ஆணையை வழங்கினா். அறக்கட்டளை பொருளாளா் காா்க்கி வரவேற்றனாா். ஒருங்கிணைப்பாளா் கிருபாகரன் தொகுத்து வழங்கினாா். வேல்ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.