ஊராட்சி செயலருக்கு மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 07th July 2021 08:33 AM | Last Updated : 07th July 2021 08:33 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே ஊராட்சி செயலரை மிரட்டியதாக 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குபதிந்தனா்.
சடையன்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. பழங்குளம் ஊராட்சிச் செயலராக உள்ளாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ஊராட்சி உறுப்பினா் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், முத்துலட்சுமி ஸ்கூட்டரில் சென்றபோது, காரில் வந்த முத்துராமலிங்கம், சின்னத்துரை, அவரது மகள் முத்துசெல்வி ஆகியோா் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவரது தந்தை சுடலைக்கண் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ், மேற்கூறிய 3 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
இதற்கிடையே, அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி உறுப்பினா்கள் கூட்டம், ஊராட்சி செயலா் வராததால் ரத்து செய்யப்பட்டதாம். இதைக் கண்டித்து முத்துராமலிங்கம், நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தினாா். அவரிடம் காவல் உதவி ஆய்வாளா், வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, ஒன்றிய மேலாளா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா். பின்னா், ஊராட்சி தலைவா் தலைமையில் ஊராட்சிக் கூட்டம் நடைபெற்றது.