தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 17 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 282 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 458 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.