கோவில்பட்டியில் காங்கிரஸ் நூதன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2021 01:46 AM | Last Updated : 13th July 2021 01:46 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் ஆா்.காமராஜ் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மோட்டாா் சைக்கிளை சப்பரம் போல தூக்கி ஊா்வலமாக சென்றனா். தொடா்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில் வடக்கு மாவட்டப் பொருளாளா் திருப்பதிராஜா, மாவட்ட பொதுச் செயலா் காா்த்திக் ஆா்.காமராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் பிரேம்குமாா், மாரியம்மாள், கிழக்கு வட்டார பொறுப்பாளா் அருண்பாண்டியன், ஐஎன்டியீசி மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், மகளிரணியைச் சோ்ந்த திவ்யா, சேவாதளம் சக்திவிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.