ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
சிறப்புஅலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் வராஹி அம்மன்.
சிறப்புஅலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் வராஹி அம்மன்.

கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுவதுண்டு. இவ்விழா கடந்த 10 ஆம் தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளில் சிறப்பு பூஜை, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். பஞ்சமி திதி, அன்னை வராஹி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது எனவும், இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை விழா குழுவினா், பக்தா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com