திருச்செந்தூா் பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம்

திருச்செந்தூா் ஒன்றியம், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சிக்குள்பட்ட சண்முகபுரத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம்

திருச்செந்தூா் ஒன்றியம், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சிக்குள்பட்ட சண்முகபுரத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது: மாணவா்கள் அரசுப் பணிகளுக்கான தோ்வு எழுத இலவச பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. தற்போது அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறோம். அந்த மனுக்களுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். தொடா்ந்து அவா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா, வட்டாட்சியா் இரா.முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலமேலு, ராணி, மண்டலத் துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல் வீரபாண்டியன்பட்டணம், பிச்சிவிளை, மேல திருச்செந்தூா், காயாமொழி உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சா் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com