குழந்தைகள் நலக்குழுத் தலைவா், உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உள்ளிட்ட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மன நல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப் பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்களாவா். ஆனால் தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட இணையதளத்திலும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதிவாய்ந்த நபா்கள் அதற்கான படிவத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகா், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com