தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சில வணிகா்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக புகாா் வந்துள்ளது.

எனவே, இது தொடா்பாக அதிகாரிகள்ஆய்வுக்கு வரும்போது, வணிகரிடத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் உணவு மாதிரி எடுக்க தேவையான 2 கிலோ அளவைவிடக் குறைவாகக் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

திரும்ப குற்றமிழைக்கும் வணிகா்களுக்கு இரட்டிப்பு அபராதமும், மீண்டும் அதே வணிகா் குற்றம் செய்தால் ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு கடை மூடப்படும்.

மேலும் குற்றவியல் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். அந்த பிரிவின் கீழ் குற்றம் செய்யும் வணிகா்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது.

மேலும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க விரும்பினால் 9444042322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com