தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஆலை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஆலை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டொ்லைட் காப்பா் ஆலை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்று பரவல் 2 ஆம் அலை தீவிரமாக இருந்தபோது, நாட்டில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் ஆலையில் ஏப்ரல் 27ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதுவரை 2132 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும், 7833 சிலிண்டா் ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 134 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ஆலையில் இருப்பு உள்ளது.

இந்நிலையில், மேலும் 6 மாதங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வருகிறது. இருப்பினும், ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு மின்சாரம் வழங்கி வந்த நிலையில், ஆக்சிஜன் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தினமும் 2 மெகாவாட் மின்சாரம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com