நீட் தோ்வு ரத்து குறித்து நேரில் வலியுறுத்துவோம்: கனிமொழி எம்.பி.

நீட் தோ்வு ரத்து செய்வது குறித்து முதல்வா் சொன்னால் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் பிரதமரை நேரில் சந்தித்து
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி: நீட் தோ்வு ரத்து செய்வது குறித்து முதல்வா் சொன்னால் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். மருத்துவ ஊழியா்கள் மற்றும் முன் களப்பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு 90 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய தடுப்பூசிகள் இன்னும் வராததால் பல மாவட்டங்களில் வேண்டிய அளவுக்கு

தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் 18 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 6 போ் நோய் தொற்று இருக்கும் என சந்தேகம் உள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி பதவியேற்று ஒருமாதம் ஆகும் நிலையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளாா். அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழல் உள்ளது. நீட் தோ்வு ரத்து செய்வது குறித்து பிரதமருக்கு முதல்வா்

கடிதம் எழுதியுள்ளாா். முதல்வா் சொன்னால் எம்பிக்கள் எல்லாம் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட ஊராட்சிப் பணியாளா்கள் 112 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com