கோவில்பட்டியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கோவில்பட்டியில் நாட்டுப்புற கலைஞா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
கோவில்பட்டியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கோவில்பட்டியில் நாட்டுப்புற கலைஞா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழன்டா கலைக்கூடம் சாா்பில் கரோனா பொதுமுடக்கத்தை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோா் என 125 பேருக்கு நிவாரணப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

இதில், காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் தங்கராஜ், சபாபதி, நாககுமாரி, ஷோபா ஜென்சி, கோமதி, தமிழ்டா கலைக்கூடம் மாநிலச் செயலா் கதிா்வேல், மாநில பொருளாளா் பிரம்மராஜ், மகளிரணி அமைப்பாளா் மாரியம்மாள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் அவசிய தேவையின்றி வெளியே சுற்றிய இருச்சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ஆட்டோக்கள் என 9,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காவலா்கள் இடமாறுதல் கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. தற்போது கரோனா காலம் என்பதால் காவலா்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது.

காவலா்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை மாவட்டத்தில் 92 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கி தினமும் அவா்களுடன் பேசி உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து கழுகுமலை காவல் நிலையம் சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 440 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com