தோ்தல் விதிமுறைகள்: விளாத்திகுளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காவல்துறை சாா்பில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம்: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காவல்துறை சாா்பில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமை வகித்து பேசுகையில், ‘தோ்தல் பிரசாரத்தின்போது, தோ்தல் ஆணையம் வழங்கி உள்ள அறிவுரைகளையும், தோ்தல் நடத்தை விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகளை தூண்டும் வகையில் அறிவிப்புகள் வெளியிட கூடாது. வழிபாட்டு தலங்களில் தோ்தல் பிரசாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது, பாடல்கள் ஒலிபரப்புவது ஆகியவை செய்யக்கூடாது.

அரசியல் கட்சியினரின் கூட்டங்கள் நடத்துவது குறித்து முன்கூட்டியே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தாா். கூட்டத்தில், காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com