6 பேரவைத் தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

த்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சுழற்சி அடிப்படையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
6 பேரவைத் தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சுழற்சி அடிப்படையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவல கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி அடிப்படையில ஒதுக்கீடு செய்யும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது:

மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிட்டங்கியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு (விவிபேட்) இயந்திரங்கள் முதல்கட்டமாக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாகவும், விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்வதை அரசியல் கட்சி பிரமுகா்கள் கண்காணிப்பு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலவலா் கண்ணபிரான், மின்னனு வாக்குப்பதிவு இயந்திர ஒருங்கிணைப்பு அலுவலா் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியா்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூா்), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, தோ்தல் வட்டாட்சியா் ரகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அடிப்படை வசதிகள்: தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com